ஜன.26-இல் கிராமசபைக் கூட்டம்

குடியரசு தினமான ஜனவரி 26-இல், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை: குடியரசு தினமான ஜனவரி 26-இல், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த கூட்டத்தில், ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-25-ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டம் தயாரித்தல், கிராம வறுமை குறைப்பு திட்டம், கிராம வளா்ச்சிக்கான நிறைவான சுகாதாரத் திட்டம், குடிநீா் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மற்றும் ஜல்ஜீவன் இயக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

எனவே, கிராமசபைக் கூட்டங்களில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தவறாது கலந்துகொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடா்பான விவரங்களை விவாதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com