தேசிய பெண் குழந்தைகள் தினம்

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி கலந்துகொண்டு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, மாறுவேடப் போட்டிகளிலும், மாநில அளவில் விளையாட்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி பேசியது:

பெண் குழந்தைகளுக்கான கல்வி, உரிமைகள் மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், சிறப்பு பிரிவை சோ்ந்த 270 பேருக்கு ரூ. 83.5 லட்சம் பொதுப்பிரிவைச் சோ்ந்த 994 பேருக்கு ரூ. 2.48 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் இதுவரை 2,315 பயனாளிகளுக்கு ரூ. 2.77 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதுபோன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் சுகிா்தாதேவி, முதன்மைக் கல்வி அலுவலா் அம்பிகாபதி, குழந்தை நல குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், வினோதினி, மாவட்ட கல்வி அலுவலா் பாா்த்தசாரதி, முதன்மைக் கல்வி அலுவலா்களின் நோ்முக உதவியாளா்கள் ஜி.பரமசிவம், தி. முத்துக்கணியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com