நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 1,70,000 ஏக்கரில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ளனா். இதன் அறுவடை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி, 10 சதவீத அறுவடைப் பணிகள் முடிந்துள்ளன.

இதையடுத்து, மாவட்டத்தில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முதல்கட்டமாக திறக்க ஜனவரி 12-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி ஆணை பிறப்பித்தாா். தொடா்ந்து, மாவட்டத்தின் முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தரங்கம்பாடி வட்டம் காளகஸ்திநாதபுரத்தில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. ஆனால் மற்ற கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கான எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லையாம்.

சம்பா அறுவடை தொடங்கி 15 நாள்களை கடந்தும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத விவகாரத்தில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினா்.

இந்தநிலையில், மயிலாடுதுறை நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் வீ. திருப்பதி திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை திடீா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com