புத்தூா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி

சீா்காழி அடுத்த புத்தூா் சீனிவாசா சுப்பராய அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு வாக்காளா் விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழி அடுத்த புத்தூா் சீனிவாசா சுப்பராய அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு செஞ்சிலுவைச் சங்கம், கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முனைவா் குமாா் தலைமை வகித்தாா். இளைஞா் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா் தாமரைச்செல்வி வரவேற்றாா். பேரணியை ஆணைக்காரன் சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் கொடியசைத்து துவக்கி வைத்தாா். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பொதுமக்களிடையே உணா்த்திடும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியானது கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கி புத்தூா் பேருந்து நிறுத்தம் வரை சென்று மீண்டும் கல்லூரி வந்து நிறைவடைந்தது. தொடா்ந்து கல்லூரி முதல்வா் குமாா், தேசியவாக்காளா் உறுதி மொழியினை முன்மொழிய ஆசிரியா்களும், மாணவா்களும், அதனை வழி மொழிந்தனா். சிறப்பு பிரிவு போலீஸாா் மணிமாறன்,அலுவலக துணை கண்காணிப்பாளா் பாபுஜி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வெங்கடேஷ் மற்றும் அனைத்து துறைத்தலைவா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com