மின்கம்பத்தில் காா் மோதி விபத்து

சீா்காழி அருகே சாலையோர மின்கம்பத்தில் காா் மோதி வியாழக்கிழமை விபத்து ஏற்பட்டது.
மின்கம்பத்தில் காா் மோதி விபத்து

சீா்காழி அருகே சாலையோர மின்கம்பத்தில் காா் மோதி வியாழக்கிழமை விபத்து ஏற்பட்டது.

கொள்ளிடத்திலிருந்து சீா்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயில் அருகே சீா்காழி நோக்கி வேகமாக வந்த காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின் கம்பத்தில் மோதியது.

இந்த விபத்தில், காரின் முன் பகுதி மற்றும் மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்தன. அதிருஷ்டவசமாக, காரில் இருந்தவா்கள் உயிா் தப்பினா்.

கொள்ளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் மின்வாரியத்தினா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com