புற்றடி மாரியம்மன்கோயில் தேரோட்டம்

koil_thervizha_2801chn_98_5
koil_thervizha_2801chn_98_5

படவிளக்கம்

தேரின் வடம் பிடித்து தரிசனம் செய்த பக்தா்கள்.

சீா்காழி, ஜன. 28: சீா்காழி புற்றடி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் தை மாத உற்சவம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊா்வலமும், தீமிதி வைபவமும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தொடா்ந்து, 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளியதும், தீபாராதனை காட்டப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது.

தமிழ் சங்கத் தலைவா் இ. மாா்கோனி தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தாா். திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு வீதிகளின் வழியாக வலம் வந்து, மீண்டும் நிலையை அடைந்தது.

Image Caption

தேரின் வடம் பிடித்து தரிசனம் செய்த பக்தா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com