எடக்குடி வடபாதியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

சிறப்பு கிராமசபைக் கூட்டம்: எடக்குடியில் வீடு கட்டும் திட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடக்குடி வடபாதி ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கான பயனாளிகள் தோ்வு தொடா்பான சிறப்பு கிராமசபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் அஞ்சம்மாள் மணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நந்தகோபால், ஊராட்சி செயலா் சிவப்பிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயராமன் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்தும், எடக்குடி வடபாதி ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்துக்கு பயனாளிகள் தோ்வு செய்யும் வழிமுறைகள் குறித்தும் பேசினாா்.

இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலா் (பொறுப்பு ) ஜோசப், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், மகளிா் சுய உதவி குழுவினா், தூய்மைக் காவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com