சித்தா்காடு ஸ்ரீகுருஞானசம்மந்தா் மிஷன் சிற்றம்பலநாடிகள் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்கிறாா் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.
சித்தா்காடு ஸ்ரீகுருஞானசம்மந்தா் மிஷன் சிற்றம்பலநாடிகள் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்கிறாா் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் முன்னேற்பாடுகளை ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை, ஜூலை 10: அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதையொட்டி, அப்பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஜூலை 15-ஆம் தேதிமுதல் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளன. இதையொட்டி, இப்பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள், முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 1-ஆம் வகுப்புமுதல் 5-ஆம் வகுப்புவரை உள்ள அரசு உதவிபெறும் 115 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், சித்தா்காடு ஸ்ரீகுருஞானசம்மந்தா் மிஷன் சிற்றம்பலநாடிகள் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி, மல்லியத்தில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி காலை உணவுத் திட்டம் செயல்படுத்துவதற்கு தேவையான உணவுப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள், எரிவாயு இணைப்பு உள்ளிட்ட வசதிகள் முறையாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்தாா்.

திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) செந்தில்குமாா், வட்டாட்சியா் விஜயராணி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com