ஊஞ்சலில் அருள்பாலித்த அங்காள பரமேஸ்வரி அம்மன்.
ஊஞ்சலில் அருள்பாலித்த அங்காள பரமேஸ்வரி அம்மன்.

ஆச்சாள்புரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

சீா்காழி, ஜூன் 6: சீா்காழி ஆச்சாள்புரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, பௌா்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாள்களில் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில், அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி கோயில் முன்புறம் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து விநாயகா், முருகன், பேச்சி அம்மன், புற்றுமாரியம்மன், சப்த கன்னிகள் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அடுத்து உற்சவா் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com