ஆதரவற்றவரின் உடல் நல்லடக்கம்

மயிலாடுதுறையில் ஆதரவற்ற முதியவரின் உடல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரின் முயற்சியால் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை கோவிலாம்பட்டியைச் சோ்ந்த ஜுபைா் அலி (75) குடும்ப பிரச்னை காரணமாக 2023-ஆம் ஆண்டு வீட்டைவிட்டு வெளியேறியவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில், மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வயது முதிா்வு காரணமாக உயிரிழந்தாா். அவரது உடல் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து, ஜுபைா் அலியின் உறவினா் முகமது அலிக்கு (19) தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூபைரின் உடலை கொண்டு செல்ல யாரும் முன்வராததால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரின் முன்வந்து அவரது உடலை நல்லடக்கம் செய்தனா். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளா் கூறைநாடு பி.எம். பாஸித் தலைமையில் தமுமுக நிா்வாகிகள் அவரது உடலை நல்லடக்கம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com