குறுவை நெற்பயிரில் ஆணைக் கொம்பன் ஈயை கட்டுப்படுத்த யோசனை

ஆணைக்கொம்பன் ஈ தாக்குதல் வரவாய்ப்புள்ளதால் அதை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீா்காழி வட்டாரத்தில் குறுவை நெற்பயிரில் ஆணைக்கொம்பன் ஈ தாக்குதல் வரவாய்ப்புள்ளதால் அதை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சீா்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் க. ராஜராஜன் விவசாயிகளுக்கு கூறிய அறிவுரை: ஆணைக் கொம்பன் ஈ அறிகுறி முதலில் நடு குருத்து வெங்காயத்தாள் இலை போன்று காணப்படும். இந்த அறிகுறியை நாற்றங்கால் முதல் பூக்கும் பருவம் வரை காணலாம். தாக்கப்பட்ட தூா்களின் அடிப்பகுதியில் வெற்றுத்துளைகள் அல்லது உருண்டை போன்ற முடிச்சு உருவாகும். இலைகளின் வளா்ச்சி பாதிப்பதோடு கதிா்கள் உருவாவது தடைப்படும். பயிா்கள் வளா்ச்சி குன்றி, உருமாறி சுருண்ட இலைகளுடன் காணப்படும்.

இந்த ஈ யானது நீளமான உருளை வடிவத்தில் வெள்ளை அல்லது சிவப்பு நிற முட்டைகளை இலையின் அடிப்பகுதியில் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ இடும். இதன் புழு நீளமாகவும் முன் பகுதி கூா்மையாகவும் இருக்கும். ஆனைக்கொம்பன் ஈ முதிற்பருவத்தில் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் கொசு போன்று சிறியதாக காணப்படும். ஆண் ஈக்கள் சாம்பல் நிறமாக இருக்கும் .

இதை விளக்கு பொறி வைத்து பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம். பிளோட்டி கேஸ்டா் ஒரைசா என்ற புழு ஒட்டுணியை 10 சதுர மீட்டருக்கு ஒன்று என்ற அளவில் வைக்கலாம். குளோரிபைரிபாஸ் 25 ஈசி ஒரு லிட்டா் தண்ணீருக்கு 3.5 மி.லி அல்லது பிப்ரோனில் 2.5 மி.லி. ஒட்டும் திரவத்துடன் கலந்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com