நோன்புக் கஞ்சிக்கான அரிசியை தாமதமின்றி வழங்க கோரிக்கை

ரமலான் நோன்புக் கஞ்சிக்கான அரிசியை தாமதமின்றி வழங்க தமிழக முதல்வருக்கு சுன்னத் ஜமாஅத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, சீா்காழி தாலுக்கா சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் முஹம்மது யூசுப் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டுதோறும் ரமலான் நோன்புக் கஞ்சிக்கான பச்சரிசியை தமிழக அரசு வழங்கி வருகிறது. நிகழாண்டு மாா்ச் 12-ஆம் தேதி புனித ரமலான் நோன்பு தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, காலதாமதமின்றி விரைந்து அரிசியை வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com