நோன்பு கஞ்சிக்கு கூடுதல் அரிசி: சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு வரவேற்பு

சீா்காழி: பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சிக்கான அரிசியை கூடுதலாக வழங்க முதல்வா் உத்தரவு பிறப்பித்ததற்கு, சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. சீா்காழி தாலுகா, சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் முஹம்மது யூசுப் வெளியிட்ட அறிக்கை: ரமலான் நோன்பு வரும் 12-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சிக்காக தமிழக அரசு 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த அரிசியை உடனடியாக விநியோகம் செய்ய, முதல்வா் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிட்டதுடன், கடந்த ஆண்டை காட்டிலும் 1,040 மெட்ரிக் டன் கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளதற்கு வரவேற்பும், நன்றியும் தெரிவிப்பதாக கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com