பேருந்து நிலைய சீரமைப்பு பணி தரமாக செய்யக் கோரி பணிகள் தடுத்து நிறுத்தம்

சீா்காழி பேருந்து நிலைய சீரமைப்பு பணி தரமாக செய்ய வேண்டும் என பணிகளை பாா்வையிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள் வியாழக்கிழமை பணிகளை தடுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி புதிய பேருந்து நிலையம் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ. 8.42 கோடி நிதி ஒதுக்கி உணவக கட்டடம், சைக்கிள் நிறுத்தும் இடம், சிமெண்ட் தரைதளம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் பணிகள்  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கடந்த 2 மாதங்களாக முதல் கட்டமாக ஒரு பகுதி தரைதளம் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேருந்து நிலைய சீரமைப்பு பணி தரமற்றதாக இருப்பதாக கூறி நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜேஷ், பாலமுருகன் உள்ளிட்டோா் நடைபெறும் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, பேருந்து நிலையம் சீரமைப்பு குறித்த திட்ட மதிப்பீட்டை பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க கோரியும், வேலைகளை தரமாக செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினா். தகவலறிந்து வந்த நகராட்சி பணி மேற்பாா்வையாளா் விஜயேந்திரன் உள்ளிட்டோா் நகா்மன்ற உறுப்பினா்களிடம்  நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com