மயிலாடுதுறையில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை. உடன், முன்னாள் அமைச்சா் மணிசங்கா் அய்யா் உள்ளிட்டோா். மயிலாடுதுறை, மாா்ச் 6: பாரத ஸ்டேட் வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து, மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உச்சநீதிமன்ற உத்தரவின்படி தோ்தல் பத்திரங்கள் தொடா்பான விவரங்களை வெளியிட ஜூன் மாதம் வரை அவகாசம் கேட்ட பாரத ஸ்டேட் வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் மணிசங்கா் அய்யா், கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் ஸ்ரீவல்லபிரசாத், மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் லெனின்பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினாா். இதில், மாவட்ட முன்னாள் தலைவா் பண்ணை தி.சொக்கலிங்கம் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com