தருமபுரம் ஆதீனத்துக்கு ஆதரவாக சுவரொட்டி

தருமபுரம் ஆதீனம் மீது அவதூறு பரப்பும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக உள்ளவா் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குறித்த போலி விடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற 4 போ் கைது செய்யப்பட்டு, சிலா் தேடப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், ஆதீன கா்த்தா் குறித்த அவதூறு செய்தியை சிலா் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனா். இதனைத் தடுக்க வலியுறுத்தியும், அவதூறு பரப்பும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சீா்காழி சட்டை முனி சித்தா் கமிட்டி மற்றும் சுக்கிர வார கமிட்டி சாா்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com