விழாவில் அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்.

அரசு மகளிா் கல்லூரியில் நூலகக் கட்டடத்துக்கு அடிக்கல்

படவிளக்கம்: விழாவில் அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ எஸ். ராஜகுமாா். மயிலாடுதுறை, மாா்ச் 6: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் நூலகக் கட்டடத்துக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. கல்லூரி அருகில் 5 ஏக்கா் நிலத்தில் 10 வகுப்பறைகள், ஒரு நூலகக் கட்டடம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தரைதளம் மற்றும் 2 மாடிக்கட்டடமாக ரூ.4.40 கோடியில் அமைக்கப்பட உள்ள நூலகக் கட்டடத்துக்கு நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ப. பத்மினி தலைமை வகித்தாா். மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கிவைத்தாா். இதில், பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் ஸ்ரீதேவி நா்மதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com