மாயூரநாதா் கோயிலில் மயூர நாட்டியாஞ்சலி இன்று தொடக்கம்

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் 18-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி வியாழக்கிழமை (மாா்ச் 7) தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நாட்டியக் கலைஞா்கள், ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த நாட்டியக் கலைஞா்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா். திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடக்கிவைக்கவுள்ள விழாவில், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, தமிழ்நாடு கைத்தறி வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கின்றனா். நிகழ்ச்சியை, அறங்காவலா் குழுத் தலைவா் என். ரவிச்சந்திரன், துணைத்தலைவா் எஸ். சிவலிங்கம், கௌரவ ஆலோசகா் லீலா சாம்சன், தலைவா் கே.பரணீதரன், செயலா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் ஏற்பாடு செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com