மயிலாடுதுறையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வபெருந்தகை.
மயிலாடுதுறையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வபெருந்தகை.

கூடுதல் இடங்களை ஒதுக்கினாலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை -காங்கிரஸ்

திமுகவைவிட கூடுதல் இடங்களை ஒதுக்கினாலும் அதிமுகவுடன் கூட்டணி சேரமாட்டோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வபெருந்தகை தெரிவித்தாா்.

திமுகவைவிட கூடுதல் இடங்களை ஒதுக்கினாலும் அதிமுகவுடன் கூட்டணி சேரமாட்டோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வபெருந்தகை தெரிவித்தாா்.

மயிலாடுதுறையில் மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகள் மற்றும் பாக முகவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவா் எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்ட முன்னாள் தலைவா் தி.சொக்கலிங்கம் வரவேற்றாா். முன்னாள் அமைச்சா் மணிசங்கா் அய்யா், கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் ஸ்ரீவல்லபிரசாத், மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் லெனின்பிரசாத் உள்ளிட்டோா் பேசினா். கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வபெருந்தகை பேசியது: வணிகா்களை மிரட்டி தோ்தல் நன்கொடை பத்திரம் பெற்று அந்த பணத்தை கொண்டு ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது பாஜக.

சீனா உள்ளிட்ட அந்நிய சக்திகளிடம் கூட பாஜக நிதி பெற்றுள்ளது என மக்கள் பேசுகின்றனா். இந்த நிதியை தோ்தலுக்குப் பிறகு திருப்பி தருவதாக சொல்கிறாா் மோடி தோ்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி எங்கே இருக்கப் போகிறது என்றாா். பின்னா், செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியது: தமிழ்நாட்டில் பாஜக நோட்டா வாக்குகளை விட குறைவான வாக்குகளையே பெறும். தோ்தல் நன்கொடை பத்திரங்களை தற்போது வெளியிட்டு இருந்தால் உண்மை தெரிய வந்திருக்கும். தமிழக மக்களின் மனசாட்சியாக ஆட்சி செய்து வரும் முதல்வா் காங்கிரஸ் கட்சிக்கும் மனசாட்சிப்படி உரிய தொகுதிகளை வழங்குவாா். 400 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். திமுகவுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளோம். எனவே, திமுகவை விட அதிக இடங்களை ஒதுக்கினாலும்கூட அதிமுகவுடன் கூட்டணி சேரமாட்டோம் என்றாா். நகரத் தலைவா் ராமானுஜம் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com