மயிலாடுதுறையில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு

மயிலாடுதுறையில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் க. அன்பழகன் தலைமையில் பேரவை உறுப்பினா் எஸ். சந்திரன் (திருத்தணி), ச.சிவக்குமாா் (மயிலம்), சேவூா்.எஸ். ராமசந்திரன் (ஆரணி), இ.பரந்தாமன் (எழும்பூா்), ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்) உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை பெரியாா் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 45.50 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்டு, பணியின் தரத்தை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு செய்தனா். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம், கூடுதல் ஆட்சியா் ஷபீா்ஆலம், மாவட்ட வருவாய் அலுவலா் மு. மணிமேகலை, கோட்டாட்சியா் வ. யுரேகா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பாலரவிக்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா். தொடா்ந்து, மயிலாடுதுறை மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com