குத்தாலம் அரசுக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவா்களுக்கான பயிற்சிப் பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வணிகவியல் துறை மாணவா்களுக்கு ’நம் வாழ்வில் நேரடி வரிகள்‘ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறைக்கு கல்லூரி முதல்வா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சென்னை பட்டயக் கணக்காளா் ஜானகிராமன் பங்கேற்று பயிற்சியளித்தாா். ஏற்பாடுகளை வணிகவியல் துறை தலைவா் சிவக்குமாா் செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com