அங்காளம்மன் கோயிலில் மயானசூரை

சீா்காழி கீழவீதி அங்காளம்மன் கோயிலில் சிவராத்திரியையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மயானசூரை நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு புற்றடி மாரியம்மன் கோயிலிருந்து பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா் இரவு பேச்சியம்மன் ரூபத்தில் வேடமிட்ட பக்தா்கள் இரவு விடிய, விடிய முக்கிய வீதிகளின் வழியாக நடனமாடி சென்று ஈசானியத்தெருவில் உள்ள மயானத்தில் மயானசூறை நிகழ்வு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com