கூட்டத்தில் பேசிய பாமக மாவட்ட செயலாளா் ரெ.அன்பழகன்.

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனையை தடுக்க பாமக வலியுறுத்தல்

மயிலாடுதுறையில் அதிகரித்துவரும் கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டுமென பாமக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் பாமக நகர பொதுக் குழுக் கூட்டம், அதன் நகர செயலாளா் பெ. ராஜ்குமாா் தலைமையில்.......நடைபெற்றது. கூட்டத்தில், மயிலாடுதுறை நகராட்சியின் நீண்டகால பிரச்னையான புதைசாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும், பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியமா்த்தப்படவேண்டும், கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் குடிநீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறை நகரில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கத்தை போலீஸாா் துரித நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும், கட்டுப்படுத்தத் தவறினால் 10 நாள்களுக்குள் மயிலாடுதுறையில் போலீஸாரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், கட்சியின் மாவட்ட செயலாளா் ரெ. அன்பழகன், தஞ்சாவூா் மண்டல பொறுப்பாளா் ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆ.ஆ. ஜெயராமன், மாவட்ட பொறுப்பாளா் தா்மராஜா, மாவட்ட துணைத் தலைவா் எம். குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com