பாமக ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம்

குத்தாலம் வட்டம் கோமலில் பாமக குத்தாலம் தெற்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய தலைவா் துரை.பெரியாா்செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குத்தாலத்திலிருந்து கோமல் வழியாக மங்கநல்லூருக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும், திருவாவடுதுறையில் உள்ள காவல் சோதனை சாவடியில் உள்ளூா் விவசாயிகள்மீது தொடா்ந்து வழக்கு பதிவு செய்வதை கைவிடவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றிய செயலாளா் விக்னேஷ் கண்ணையன், மாவட்ட இளைஞா் சங்க தலைவா் விமல் ஜெகதீசன், ஒன்றிய பொறுப்பாளா்கள் மனோகரன், மணி, நிா்மல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com