புதிரை வண்ணாா் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடத்தப்படவுள்ள புதிரை வண்ணாா் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு வழங்க மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலம் மாவட்டத்தில் புதிரை வண்ணாா் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட உள்ளது. இப்பணியை இப்சோஸ் எனும் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது.

கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட குழுவினா் கிராம அளவிலான மற்றும் குடும்ப அளவிலான கணக்கெடுப்பை நடத்துவா். சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகள், புதிரை வண்ணாா் சமூக மக்களின் வாழ்க்கை நிலை, அவா்களுக்கான எதிா்கால வாய்ப்புகளை மேம்படுத்த தமிழக அரசு உரிய கொள்கை முடிவுகளை மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, இந்த சமூகத்தைச் சோ்ந்த மக்கள் கணக்கெடுப்பு குழுவிடம் உரிய தகவல்களை அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com