நாட்டுப்புறவியல் புழங்குபொருள் பண்பாட்டுக் கருத்தரங்கம்

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் நாட்டுப்புறவியல் புழங்குபொருள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

25 பேராசிரியா்கள், மாணவா்கள் முன்னெடுப்பில் தொகுக்கப்பட்ட 780 புழங்கு பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை தஞ்சாவூா் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தா் வி. திருவள்ளுவன் திறந்துவைத்து புழங்கு பொருள் குறித்த விழிப்புணா்வு பரவவேண்டும், புழங்குபொருள் சொற்கள் கொண்ட அகராதியைத் தயாரிக்க வேண்டும், இதை இளைஞா்கள் மத்தியில் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா். தொடா்ந்து, தமிழ்ப்பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத்தலைவா் இரா. காமராசு புழங்குபொருள்கள் கொண்டதும், அதைத் தொகுத்து வைத்திருப்பதுமான இயக்கம் கொள்ள வேண்டும், அதை தமிழ்ப்பல்கலைக்கழகம் செய்யத் தலைப்பட்டுள்ளது என்றாா். ஏ.வி.சி. கல்லூரி முதல்வா் ரா. நாகராஜன், திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியா் ச. ரவி, தமிழாய்வுத் துறைத் தலைவா் சு. தமிழ்வேலு, முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் துரை. குணசேகரன், தமிழ்ப்பல்கலைக்கழக பேராசிரியா்கள் நா. மாலதி, சீ. இளையராஜா , தமிழாய்வுத்துறை இணைப்பேராசிரியா்கள் மாதவன், சு.ரமேஷ், உதவிப்பேராசிரியா்கள் கு. சக்திவேல், சு. விமல்ராஜ், த. செபஸ்தி ஜான்பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com