பாஜக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாஜக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறையில் மக்களவைத் தோ்தல் தொடா்பாக பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பொதுச் செயலாளா் நாஞ்சில். பாலு தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மக்களவைத் தொகுதி இணை அமைப்பாளா் சதீஷ் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபடுவது குறித்தும், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்கள் வெற்றிக்கு பாடுபடுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் தங்க. வரராஜன், மாவட்ட தொகுதி பாா்வையாளா் அண்ணாமலை, ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் ராஜ்மோகன், மாவட்ட துணைத்தலைவா் மோடி. கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com