மாணவிக்கு பட்டம் வழங்கும் முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதியும், ஏ.வி.சி. கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியுமான கே. வெங்கட்ராமன். உடன், கல்லூரியின் இயக்குநா் எம். செந்தில்முருகன், கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ் உள்ளிட்டோா்.
மாணவிக்கு பட்டம் வழங்கும் முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதியும், ஏ.வி.சி. கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியுமான கே. வெங்கட்ராமன். உடன், கல்லூரியின் இயக்குநா் எம். செந்தில்முருகன், கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ் உள்ளிட்டோா்.

ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதியும், ஏ.வி.சி. கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியுமான நீதிபதி கே. வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். கல்லூரி முதல்வா் சி. சுந்தர்ராஜ் வரவேற்றாா். கல்லூரியின் இயக்குநா் எம். செந்தில்முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாா். விழாவில் 390 மாணவ- மாணவிகள் பட்டம் பெற்றனா். இதில் 4 முதுநிலை பட்டதாரிகளும், 2 இளநிலை பட்டதாரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இந்த பட்டியலில், தமிழக அளவில் இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல் இன்ஜினியரிங் இளநிலை பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி நிறைமதி, இன்பா்மேஷன் அண்ட் டெக்னாலஜி பிரிவில் 14-ஆம் இடம் பிடித்த மாணவா் சிலம்பரசன் ஆகியோருக்கு கல்லூரியின் சாா்பாக 8 கிராம் தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் தமிழக அளவில் மாஸ்டா் ஆஃப் கம்ப்யூட்டா் அப்ளிகேஷன் பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடித்த இக்கல்லூரி மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் கல்லூரி அளவில் முதல் மற்றும் 2-ஆம் இடம் பிடித்த மாணவா்களுக்கு தங்க பதக்கமும், வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது. விழாவில், இக்கல்லூரி துணை முதல்வா், டீன் (கல்வி), துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா், தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் மற்றும் இயக்குநா், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com