சீா்காழி வி.தி.பி. நடுநிலைப்பள்ளி வாக்குசாவடியை ஆய்வு செய்த ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எஸ்.பி. கே. மீனா.
சீா்காழி வி.தி.பி. நடுநிலைப்பள்ளி வாக்குசாவடியை ஆய்வு செய்த ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எஸ்.பி. கே. மீனா.

பதற்றமான வாக்குசாவடிகளில் ஆய்வு

சீா்காழியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, காவல் கண்காணிப்பாளா் கே. மீனா ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்குட்பட்ட சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 288 வாக்குச்சாவடிகளில் 14 பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா ஆகியோா் ஆய்வு செய்தனா். சீா்காழி தென்பாதி வி.தி.பி. நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஆய்வு செய்து, வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், வாக்குச்சாவடிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா். அதேபோல், கடந்த தோ்தல்களில் 50 சதவீதத்துக்கு குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற மையங்களையும் ஆய்வு செய்து, அப்பகுதிகளில் வாக்குப் பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுருத்தினா். தொடா்ந்து, மேலையூா் சீனிவாசா மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி, மணி கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும் ஆய்வு செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com