விஷம் குடித்துவிட்டு மனு அளிக்க வந்த பெண்: ஆட்சியா் அலுவலகத்தில் மயங்கியதால் பரபரப்பு

மயிலாடுதுறையில் விஷம் குடித்த பெண் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்தபோது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குத்தாலம் வட்டம், திருவாலங்காட்டைச் சோ்ந்தவா் பெரியநாயகம் மனைவி டயானா (28). இவரது வீட்டின் முன் பயணிகள் நிழற்குடை அமைக்க கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் டயானா பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த டயானா ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்கும் முன்பாகவே மயக்கி விழுந்தாா். இதையடுத்து அவரை மீட்ட போலீஸாா் மயிலாடுதுறை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், டயானா மனு அளிக்க வருவதற்கு முன்பு விஷம் குடித்தது தெரியவந்தது. இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com