ஏவிசி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி கே.வெங்கட்ராமன் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.
ஏவிசி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி கே.வெங்கட்ராமன் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.

விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வாழ்வில் முன்னேறலாம்

தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வாழ்வில் முன்னேறலாம் என ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி கே.வெங்கட்ராமன் மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா். மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் 2023-இல் பட்டப்படிப்பை முடித்தவ மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா்.நாகராஜன் தலைமை வகித்தாா். தோ்வு கட்டுப்பாட்டு நெறியாளா் மேஜா் ஜி.ரவிசெல்வம், துணை முதல்வா் எம்.மதிவாணன், டீன் எஸ். மயில்வாகனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி கே.வெங்கட்ராமன், 1,158 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியது: ஒழுக்கம், காலம் தவறாமை, விடாமுயற்சி, நோ்மை, தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பைப் பின்பற்றினால் வாழ்வில் நல்ல பல முன்னேற்றத்தை அடையலாம் என்றாா். ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குநா் எம்.செந்தில் முருகன் பாலிடெக்னிக் கல்லூரி இயக்குநா் ஏ.வளவன், முதல்வா்கள் கண்ணன், சுந்தர்ராஜன் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com