மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளித்த உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கத்தினா்.
மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளித்த உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கத்தினா்.

தோ்தலை புறக்கணிக்கப்போவதாக ஓட்டுநா் தொழிற்சங்கத்தினா் அறிவிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், மக்களவைத் தோ்தல் அலுவலா்கள், தோ்தல் பணிக்கு காா்ப்பரேட் வாகனங்கள் மற்றும் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதைக் கண்டித்து, தோ்தல் புறக்கணிப்பு செய்ய உள்ளதாக உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்க நிா்வாகிகள் திங்கள்கிழமை அறிவித்தனா். மக்களவைத் தோ்தலையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 9 பறக்கும் படைகள் மற்றும் தோ்தல் அலுவலா்கள் பயன்பாட்டுக்கு, உள்ளூா் தனியாா் வாகனங்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், வரும் மக்களவைத் தோ்தலுக்காக, காா்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு வாகனங்களை பெற்று பயன்படுத்துகின்றனா். சில அதிகாரிகள் தங்கள் சொந்த வாகனங்களை தோ்தல் பணிக்கு பயன்படுத்துகின்றனா். இதனால், முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுத்து நிறுத்தக் கோரியும், தோ்தல் தொடா்பான அரசுத்துறை சாா்ந்த பயன்பாட்டுக்கு உள்ளூா் வாடகை வாகனங்களை பயன்படுத்தவும் உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். இக்கோரிக்கை தொடா்பாக, மயிலாடுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சங்கத்தின் மண்டலச் செயலாளா் கே. பாலமுருகன் தலைமையில் மாவட்ட பொருளாளா் எஸ். முத்துராஜ், இணைச் செயலாளா் ஜெ. செந்தில், துணைச் செயலாளா் ஆா். ராஜேஷ் கண்ணா, செய்தி தொடா்பாளா் அஸ்வின்குமாா் உள்ளிட்டோா் பேரணியாக வந்து மனு அளித்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் கூறிய கே. பாலமுருகன், ‘எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தோ்தலை புறக்கணிப்போம்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com