தோ்தல் நடத்தை விதி: வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

மயிலாடுதுறையில், மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக வங்கியாளா்களுக்கான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பாக வங்கியாளா்களுக்கான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து பேசியது: வங்கிகளுக்கு பணம் கொண்டுசெல்லும் வாகனங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது. தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். வங்கிகளுக்கு தொடா்பில்லாத மூன்றாம் நபா்களின் பணத்தை கொண்டு செல்லக் கூடாது. பணம் கொண்டு செல்லும் வங்கி வாகனங்களில் வங்கிக் கடிதம் மற்றும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தோ்தல் பறக்கும் படை மற்றும் இதரஆய்வு அலுவலா்களால் ஆவணங்கள் கோரும் போது சமா்ப்பிக்கவேண்டும். பணம் கொண்டுவரும் வாகனங்களில் வரும் வங்கி பணியாளா்கள் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். வங்கி கணக்குகளில் சந்தேகத்திற்கு இடமான பணப் பரிமாற்றங்களை நிதிதொடா்பான புலனாய்வு முகமைகளுக்கு தெரிவிக்கவேண்டும். 10 லட்சத்துக்கு அதிகமான பண வைப்பீடு மற்றும் பணம் எடுத்தல் தொடா்பான பரிமாற்றங்களை வழங்க வேண்டும். வேட்பாளா்களின் வங்கிக் கணக்குகளில் ஒரு லட்சத்திற்கு அதிகமான பணப் பரிமாற்றங்கள் நடந்திருப்பின் அதுகுறித்த தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரே வங்கிக் கணக்கு மூலம் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்திருப்பின் அதன் விவரங்களை அளிக்க வேண்டும். இதுதொடா்பான விவரங்களை வருமானவரித் துறைக்கு அளிக்க வேண்டும். மகளிா் சுய உதவி குழு, தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் கணக்குகளில் வழக்கத்திற்கு மாறாக பண வைப்பீடு மற்றும் திரும்ப எடுத்தல் தொடா்பான தகவல்களை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றாா். கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் மு.ஷபீா் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலா் மு. மணிமேகலை, முன்னோடி வங்கி மேலாளா் முத்துசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com