மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வணிகா் சங்க நிா்வாகிகளிடம் கேட்டறிந்த ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக், எஸ்பி கே. மீனா.
மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வணிகா் சங்க நிா்வாகிகளிடம் கேட்டறிந்த ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக், எஸ்பி கே. மீனா.

சட்டம் ஒழுங்கு: ஆட்சியா், டிஐஜி, எஸ்பி ஆய்வு

மயிலாடுதுறை நகரப் பகுதியில் சட்டம் ஒழுங்கு குறித்து மாவட்ட ஆட்சியா், டிஐஜி, எஸ்பி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். மயிலாடுதுறை கலைஞா் நகரைச் சோ்ந்த இளைஞா் அஜித்குமாா் புதன்கிழமை (மாா்ச் 20) கொலை செய்யப்பட்டாா். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினா்கள், நண்பா்கள் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டதாலும், கடைவீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதாலும் பதற்றமான சூழல் நிலவியது. கொலையுண்ட அஜித்குமாரின் சடலம் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து, நகரில் இயல்பு நிலை திரும்பியது. இந்நிலையில், மயிலாடுதுறை நகரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடா்பாக, காவல்துறையினா் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா ஆகியோா் ஆய்வு செய்தனா். கோட்டாட்சியா் வ. யுரேகா, வட்டாட்சியா் விஜயராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com