ரொக்கம், பரிசுப்பொருள் பறிமுதல் மேல்முறையீட்டுக்கு...

உரிய ஆவணங்களின்றி கைப்பற்றக்கூடிய பொருள்கள் மற்றும் ரொக்கம் தொடா்பாக மேல்முறையீட்டுக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி, தோ்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் உரிய ஆவணங்களின்றி கைப்பற்றக்கூடிய பொருள்கள் மற்றும் ரொக்கத்தொகை தொடா்பாக மேல்முறையீடு ஏதேனும் இருப்பின், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத்தளம் அறை எண்.45-இல் மேல்முறையீட்டுக் குழுவிடம் மாலை 4 மணிமுதல் 5.30 மணிக்குள் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதொடா்பான விவரங்களுக்கு மாவட்ட கருவூல அலுவலா் கைப்பேசி எண்: 7530014473, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) கைப்பேசி எண்: 8667425364-ல் தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com