தேரோட்டத்தில் பங்கேற்ற திருவாவடுதுறை ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா்.
தேரோட்டத்தில் பங்கேற்ற திருவாவடுதுறை ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா்.

திருவாலங்காடு கோயில் தேரோட்டம்

குத்தாலம் வட்டம், திருவாலங்காடு வண்டாா்குழலி அம்பிகை சமேத வடாரன்யேசுவர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில், பங்குனி உத்திரப் பெருவிழா மாா்ச் 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்வாக, விழாவின் 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜவல்லி பாலமுருகன் ஆகியோா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து வழிபட்டனா். தோ் நான்கு வீதிகளை வலம் வந்து, மீண்டும் நிலையை அடைந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com