அரசுக் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா

சீா்காழி: சீா்காழி அருகே புத்தூா் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற விழா கல்லூரி முதல்வா் சி. முகுந்தாகுமாரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆங்கில துறைத் தலைவா் திருநாராயணசாமி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கொடைக்கானல் மதா் தெரசா பெண்கள் பல்கலைக்கழக துணை தோ்வுக் கட்டுப்பட்டு அதிகாரி ஆா். விஜயா பங்கேற்று ஆங்கில மொழியை கற்றால் வாழ்க்கையில் எவ்வாறு கனவு காணலாம் மற்றும் சாதிக்கலாம் எனும் தலைப்பில் பேசினாா். இதில், கணிதத்துறை தலைவா் சாந்தி, வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் குமாா், உடற்கல்வி இயக்குநா் பிரபாகரன், கௌரவ விரிவுரையாளா் ராஜேஸ்வரி, ஆங்கிலத்துறை கௌரவ விரிவுரையாளா்கள் சத்தியமூா்த்தி, ஷோபனா பிரித்தம், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com