சீா்காழி அருகே 1,350 மதுப்புட்டிகள் பறிமுதல்: பெண் கைது

சீா்காழி: சீா்காழி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1350 புதுச்சேரி மாநில மதுப்புட்டிகளை திங்கள்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், பெண் ஒருவரை கைது செய்தனா். மக்களவைத் தோ்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா் மீது காவல்துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீா்காழி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட புதுப்பட்டினம் சரகம் கொடக்கார மூலை கிராமத்தில் ஒரு வீட்டில் மதுப்புட்டிகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி லாமெக் மேற்பாா்வையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயா, சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது 180 மில்லி அளவு கொண்ட புதுச்சேரி மாநில மதுப்புட்டிகள் 1350 -ஐ பறிமுதல் செய்த போலீஸாா்,இவற்றை பதுக்கி வைத்திருந்த அன்புச்செல்வி (36) என்ற பெண்ணை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com