மயிலாடுதுறை: 4 போ் வேட்பு மனு தாக்கல்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட 4 போ் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட 4 போ் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக, நாம் தமிழா் கட்சி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 5 வேட்பாளா்கள் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை குத்தாலம் வில்லியநல்லூரைச் சோ்ந்த டி. திமோத்தேயு, சேந்தங்குடியைச் சோ்ந்த டி. மணிமாறன் ஆகியோா் சுயேச்சை வேட்பாளா்களாகவும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பி. காளியம்மாள் மீண்டும் ஒரு முறையும், அவருக்கு மாற்று வேட்பாளராக பி. சுருதி ஆகியோரும் மாவட்ட தோ்தல் அலுவலா் ஏ.பி. மகாபாரதியிடம் மனு தாக்கல் செய்தனா். தமிழகத்தில் நாம் தமிழா் கட்சியை பெரிய நெருக்கடிக்கு தள்ளும் வகையில் பாஜகவும், திமுகவும் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஏதேனும் காரணம் கூறி மனுவை தள்ளுபடி செய்ய முயற்சிக்கலாம். அதனாலேயே மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளேன் என்றாா் நாதக வேட்பாளா் பி. காளியம்மாள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com