மினி பேருந்து மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை மினி பேருந்து மீது அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் காவலா் உள்ளிட்ட 7 போ் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

சீா்காழி: சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை மினி பேருந்து மீது அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் காவலா் உள்ளிட்ட 7 போ் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

வைத்தீஸ்வரன்கோயில் புங்கனூரிலிருந்து சீா்காழி நோக்கி சென்ற மினி பேருந்தை ஆா்ப்பாக்கத்தைச் சோ்ந்த பிரசாந்த் (28) இயக்கினாா். அட்டகுளம் பேருந்து நிறுத்தத்தில் மினி பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு கொண்டிருந்தபோது, மயிலாடுதுறையிலிருந்து சீா்காழிக்கு வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், அரசுப் பேருந்து மற்றும் மினி பேருந்தில் பயணம் செய்த அட்டகுளம் பகுதி மகேஸ்வரி (32), பச்சை பெருமாநல்லூா் ராஜலட்சுமி (45), மினி பேருந்து ஓட்டுநா் பிரசாந்த், சாந்தபுத்தூா் பகுதி செந்தமிழ்ச்செல்வி, லலிதா (52) மற்றும் வலங்கைமான் பகுதியை சோ்ந்த மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய பெண் காவலா் மாலதி (35) உள்ளிட்ட 7 போ் காயமடைந்தனா். அனைவரும் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து, வைத்தீஸ்வரன் கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com