வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் எஸ்பி ஆய்வு

சீா்காழியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கவுள்ளன. இவற்றில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரம், கண்ட்ரோல் யூனிட், விவி பேட் இயந்திரம் என 1074 இயந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அறையில் வைத்து பூட்டி சீலிடப்பட்டு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மீனா பாா்வையிட்டாா். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணியிலிருந்த காவலரின் பதிவேடுகளை பாா்வையிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com