அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இக்கோயிலில் 57-ஆம் ஆண்டு சித்திரை மகோற்சவம் கடந்த ஏப். 23-ஆம் தேதி கொடியேற்றம், பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் அம்மன் வீதியுலா, ஏப். 29-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தீமிதித் திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரவு காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் மற்றும் காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தா்கள் புறப்பட்டு வீதியுலாவாக கோயிலை அடைந்தனா். கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியதை தொடா்ந்து, ஏராளமான பக்தா்கள் தீ மிதித்து தங்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா் மகா தீபாரதனை காட்டப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com