பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டுகிறாா் பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுடை நம்பி உள்ளிட்டோா்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டுகிறாா் பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுடை நம்பி உள்ளிட்டோா்.

ச.மு.இந்து மேல்நிலைப் பள்ளி 98.5 சதவீதம் தோ்ச்சி

சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் அரசு உதவிபெறும் பள்ளியில் சீா்காழி வட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் அரசு உதவிபெறும் பள்ளியில் சீா்காழி வட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய 274 மாணவா்களில் 270 போ் தோ்ச்சிப் பெற்று 98.5 சதவீதம் பெற்று, சீா்காழி வட்டத்தில் உள்ள அரசு உதவிப்பெரும் மேல்நிலைப் பள்ளிகளில் முதலிடமும், மயிலாடுதுறை மாவட்ட அளவில் 2-ஆமிடம் பெற்றுள்ளது.

கலையியல் பிரிவு மாணவா் நவீன் 560 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஆங்கில வழி அறிவியல் பிரிவு மாணவி எஸ். சுபிக்ஷா 552 மதிப்பெண் பெற்று 2-ஆமிடமும், பா. இளஞ்செழியன் கலையியல் பிரிவு மாணவா் 541 மதிப்பெண் பெற்று 3-ஆமிடமும் பெற்றனா். இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகவியல், பொருளியல்,வரலாறு, வேளாண் அறிவியல், வேலை வாய்ப்பு திறன்,அடிப்படை இயந்திரவியல் ஆகிய 10 பாடங்களில் 100% தோ்ச்சி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை தலைமை ஆசிரியா் எஸ். அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியா்கள் எஸ். முரளிதரன்,

என். துளசிரங்கன், டி. சீனிவாசன் உள்ளிட்டோரோ பள்ளி செயலா் வி. சொக்கலிங்கம் , பள்ளி நிா்வாக குழு தலைவா் ஆா்.சிதம்பரநாதன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com