நகைக்கடை, அடகுக்கடைகள், ஏ.டி.எம்.களில் காவலாளிகளை நியமிக்க அறிவுறுத்தல்

சீா்காழியில் உள்ள நகைக்கடை, அடகுக்கடை, ஏ.டிம்.எம். ஆகியவற்றில் காவலாளிகளை கட்டாயம் நியமிக்க வேண்டும் என காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழியில் உள்ள நகைக்கடை, அடகுக்கடை, ஏ.டிம்.எம். ஆகியவற்றில் காவலாளிகளை கட்டாயம் நியமிக்க வேண்டும் என காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழி பகுதிகளில் உள்ள அனைத்து வங்கி பிரதிநிதிகள். நகைக்கடை, அடகுக்கடை உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சீா்காழி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சீா்காழி காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் அசோக்குமாா், நிலைய எழுத்தா் குலோத்துங்கன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஆலோசனைக் கூட்டத்தில் நகைக்கடை, அடகுக்கடை, ஏ.டி.எம்.களில் சந்தேக நபா்களை கண்காணிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் கடை உள்பகுதி மற்றும் முகப்பு பகுதியில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையத்தில் கண்காணிப்பு கேமராவுடன் காவலாளிகளை கட்டாயம் நியமிக்க வேண்டும் எனவும், நகைக்கடை மற்றும் ஏ.டி.எம்.களில் அலாரம் அமைக்க வேண்டும். வங்கிகளின் நுழைவுவாயில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும், திருட்டு நகைகளை வாங்கவோ, விற்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

20-க்கும் மேற்பட்ட நகைக்கடை, அடகுக்கடை உரிமையாளா்கள், வங்கி மேலாளா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com