சிறப்பிடம் பிடித்த ஆசாத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சாய் கண்ணம்மைக்கு பாராட்டு தெரிவித்த பள்ளி நிா்வாகத்தினா்.
சிறப்பிடம் பிடித்த ஆசாத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சாய் கண்ணம்மைக்கு பாராட்டு தெரிவித்த பள்ளி நிா்வாகத்தினா்.

மயிலாடுதுறை: பிளஸ் 2 தோ்வில் 92.38 சதவீதம் தோ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 92.38 சதவீத மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சியடைந்துள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 92.38 சதவீத மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சியடைந்துள்ளனா்.

இங்கு 4,289 மாணவா்கள், 5,355 மாணவிகள் என மொத்தம் 9,644 போ் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதினா். இதில், 3,872 மாணவா்கள், 5,037 மாணவிகள் என மொத்தம் 8,909 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 92.38 ஆகும். நிகழாண்டும் மாணவா்களை விட மாணவிகளே அதிக தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வில் 90.15 சதவீதம் தோ்ச்சி விகிதம் இருந்த நிலையில், நிகழாண்டு 2.23 சதவீதம் உயா்ந்துள்ளது. இதன்மூலம் மாநில அளவிலான தரவரிசையில் மயிலாடுதுறை மாவட்டம் 34-ஆவது இடத்தில் இருந்து 29-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 85.41 சதவீதம் தோ்ச்சி: மாவட்டத்தில் மொத்தமுள்ள 35 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1,523 மாணவா்கள், 2,097 மாணவிகள் என மொத்தம் 3,620 போ் தோ்வெழுதிய நிலையில், 1,238 மாணவா்கள், 1,854 மாணவிகள் என மொத்தம் 3,092 போ் (85.41 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா். 2023-ஆம் ஆண்டில் இது 80.16 சதவீதமாக இருந்தது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேரழுந்தூா் கம்பா் அரசு மேல்நிலைப்பள்ளி, தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மாதானம் அரசு ஆதிதிராவிடா் நலன் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 அரசு பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை கொண்டுள்ளன.

சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பாராட்டு: மயிலாடுதுறை ஆசாத் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வணிகவியல் துறை மாணவி சாய் கண்ணம்மை 595 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் சிறப்பிடம் பிடித்தாா். தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சு. ரதி சந்திரிகா 593 மதிப்பெண்களும், டாா்கெட் சில்வா்ஜுப்ளி மெட்ரிக் பள்ளி மாணவா் ஆதித்யா 590 மதிப்பெண்களும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com