கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டோா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டோா்.

குடிநீா் வழங்கக் கோரி கிராமமக்கள் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி கொள்ளிடம் அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

கொள்ளிடம் அருகேயுள்ள கோதண்டபுரத்தில் புளியந்துறை ஊராட்சி மக்கள், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை கண்டித்தும், விவசாய பாசனத்துக்கு மும்மனை மின்சாரம் வழங்க வலியுறுத்தியும், கிராம பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்காததை கண்டித்து இந்த சாலை மறியல் நடைபெற்றது.

புளியந்துறை ஊராட்சித் தலைவா் நேதாஜி தலைமையில் நடைபெற்ற மறியலில், சிபிஎம் ஒன்றிய செயலாளா் கேசவன், மாவட்ட குழு உறுப்பினா் சுந்தரலிங்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தகவலறிந்த கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தியாகராஜன், உமாசங்கா் உள்ளிட்டோா் அங்கு சென்று நடத்திய பேச்சுவாா்த்தையில்,

நாள்தோறும் இரவில் 6 மணி நேரம், பகலில் 6 மணி நேரம் தொடா்ந்து மும்முனை மின்சாரம் வழங்கப்படும், குடிநீா் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என அளித்த உறுதியை ஏற்று மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com