பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி

பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தருமபுரம் ஆதீனத்திடம் திங்கள்கிழமை ஆசி பெற்றனா்.

இப்பள்ளியில் 226 மாணவா்கள் தோ்வெழுதியிருந்த நிலையில் 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது. மேலும் இப்பள்ளி மாணவி க. ரதிசந்திரிகா 593 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றாா். இந்நிலையில், பள்ளியில் முதல் மூன்று சிறப்பிடங்களை பெற்ற மாணவா்கள் மற்றும் பாடப் பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com