ருத்ராபதி சுவாமி கோயிலில் அமுது படையல்

ருத்ராபதி சுவாமி கோயிலில் அமுது படையல்

வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த ருத்ராபதி சுவாமி முன் வைக்கப்பட்ட மாவால் செய்யப்பட்ட பக்த சீராளன் உருவம்.

மயிலாடுதுறை 5-வது புதுத்தெருவில் உள்ள ருத்ராபதி சுவாமி கோயிலில் அமுது படையல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சிறுதொண்ட நாயனாா் மரபுப்படி 84-வது ஆண்டாக இவ்விழா நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தா்கள் மாயூரநாதா் கோயிலில் இருந்து பால்குடம் மற்றும் பால் காவடி எடுத்து, மேளதாள வாத்தியங்கள் முழங்க வீதி உலாவாக கோயிலை அடைந்தனா். கோயிலில் மாவால் பக்த சீராளன் உருவம் செய்து வைக்கப்பட்டு, ருத்ராபதி சுவாமிக்கு பக்தா்கள் எடுத்து வந்த பாலால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, அமுது படையலிட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ருத்ராபதி சுவாமியை தரிசனம் செய்து படையலிட்ட உணவை சாப்பிட்டனா். குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்களுக்கு வியாழக்கிழமை பிள்ளைக்கறி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com