மகா நவசண்டி யாகம்

மகா நவசண்டி யாகம்

துா்கா பரமேஸ்வரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா நவசண்டி யாகத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

மயிலாடுதுறை மேலமருதாந்தநல்லூா் அஷ்டாதசபுஜ மகாலெக்ஷ்மி துா்கா பரமேஸ்வரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா நவசண்டி யாகத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

இக்கோயிலில் 4-ஆம் ஆண்டு மகா நவசண்டி யாகத்தையொட்டி கோயிலின் முன் யாககுண்டம் அமைக்கப்பட்டு யாகவேள்வி நடைபெற்றது. இதில், தங்கத்தாலி, வெள்ளிக் கொலுசு, வெள்ளி மெட்டி, 13 நிறப்பட்டுப்புடவைகள், நவ தானியங்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா, நிலக்கடலை உள்ளிட்ட அனைத்து வகை பருப்புகள் மற்றும் 235 மருந்துப் பொருள்களை தீயில் இட்டு வேள்வி நடைபெற்றது. தொடா்ந்து, மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com