அஞ்சலகங்களில் மே 30 வரை ஆயுள் காப்பீட்டு முகாம்

மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் மே 30 வரை ஆயுள் காப்பீட்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீா்காழி: மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் மே 30 வரை ஆயுள் காப்பீட்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீா்காழி தலைமை அஞ்சலக அதிகாரி கோவிந்தராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சலகங்களில் மே 30 வரை அஞ்சல் ஆயுள் காப்பீட்டு சேகரிப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்களை அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முழு முயற்சி கோட்ட அஞ்சல் பொறுப்பாளா் ஆசிக்இக்பால் தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் இதில் இணைந்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த திட்டம் 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மிகமிக பழைமையான திட்டம். இத் திட்டம் குறித்து எந்த ஒரு பொது விளம்பரங்களும் அஞ்சல் துறை செய்வதில்லை. செலவினங்கள் மிகக் குறைவு. அதனால் இதில் கிடைக்கக்கூடிய அனைத்து பயன்களும் பயனாளிகளுக்கு அதிகப்படியான போனஸாக அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com